/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.10 லட்சத்தில் இருக்கைகள் பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கல் ரூ.10 லட்சத்தில் இருக்கைகள் பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்
ரூ.10 லட்சத்தில் இருக்கைகள் பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்
ரூ.10 லட்சத்தில் இருக்கைகள் பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்
ரூ.10 லட்சத்தில் இருக்கைகள் பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூன் 19, 2024 01:10 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, சி.வி.சண்முகம் எம்.பி, மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்தில் இருக்கைகள் வழங்கப்பட்டது.
புவனகிரி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கி மாணவர்கள் அமரும் பெஞ்ச், மேஜைகள் வழங்கினார். வளையமாதேவி வள்ளலார் உதவி பெறும் மேல்நிலை பள்ளிக்கு 28 மேஜை, பெஞ்ச், துறிஞ்சிக்கொல்லை கிறிஸ்தவ உதவிபெறும் பள்ளிக்கு 10 மேஜை, பெஞ்ச், ஒரத்துார் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளிக்கு 26 மேஜை, பெஞ்ச் என, மொத்தம் 10 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, ஒன்றிய செயலாளர் நல்லுார் முத்து, ஜெயசீலன், நகரசெயலாளர் மணிகண்டன், பிரித்திவி, ஒன்றிய பொருளாளர் சங்கர், அரங்கசாமி, சாமிநாதன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன், அவைத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.