/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பி.எம்.இ.ஜி., திட்டத்தில் மானிய கார் வழங்கல் பி.எம்.இ.ஜி., திட்டத்தில் மானிய கார் வழங்கல்
பி.எம்.இ.ஜி., திட்டத்தில் மானிய கார் வழங்கல்
பி.எம்.இ.ஜி., திட்டத்தில் மானிய கார் வழங்கல்
பி.எம்.இ.ஜி., திட்டத்தில் மானிய கார் வழங்கல்
ADDED : ஜூன் 22, 2024 05:08 AM

சிதம்பரம் : பா.ஜ., மத்திய அரசு, நலத்திட்ட பிரிவு, வழிகாட்டுதல் படி, பி.எம்.இ.ஜி., திட்டத்தின் கீழ் மானியத்தின் மூலம், கார் வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் (பி.எம்.இ.ஜி) ஓட்டுநர்கள் ஓனராகலாம் என்ற அடிப்படையில், மத்திய அரசு சார்பில், 2 லட்சத்து 80 ஆயிரம் மானியத்தில் கார் கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட கமிட்டி சார்பில், பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கான உதவிகளை பெற்று தருகிறது.
அதன் அடிப்படையில், சிதம்பரத்தை சேர்ந்த மீனா கார்த்திகேயன் என்பவர், இத்திட்டத்தின் கீழ், சிதம்பரம் ஸ்டேட் பாங்க் கடன் மூலம் புதிய கார் வழங்கப்பட்டது.
அப்போது மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் பாலு விக்னேஸ்வரன், விஷ்வ ஹிந்து பரிஷித், மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உடன் இருந்தனர்.
மேலும் ஆடு, மாடு, கோழி பண்ணைகள் அமைத்திடவும், தொழில் தொடங்கவும், ஆட்டோ, கார் போன்ற வாடகைக்கு ஓட்டும் வாகனங்கள் இத்திட்டத்தின் மூலம் மானியத்தில் வங்கி கடன் பெற முடியும் என, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் பாலு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.