Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊராட்சி நிதியில் அரசு பள்ளி கழிவறை கலெக்டர் முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஊராட்சி நிதியில் அரசு பள்ளி கழிவறை கலெக்டர் முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஊராட்சி நிதியில் அரசு பள்ளி கழிவறை கலெக்டர் முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஊராட்சி நிதியில் அரசு பள்ளி கழிவறை கலெக்டர் முயற்சிக்கு குவியும் பாராட்டு

ADDED : ஜூன் 22, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
காட்டுமன்னார்கோவில் : கலெக்டரின் முற்சியால், ஊராட்சி நிதியில், பள்ளிக்கு கழிவறை கட்டி திறக்கப்பட்டது.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதிய கழிவறை வசதியின்றி மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். பள்ளி சார்பில், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டும் தீர்வு இல்லை.

மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணனுக்கு இது குறித்து கோரிக்கை வைத்தனர். அதில், ஊராட்சி நிதியிலிருந்து, கழிவறை கட்ட, அனுமதி இல்லை எனவும், பொதுப்பணித் துறையினர் தான் கட்ட முடியும் என தெரியவந்தது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தீர்வு இல்லை.

இதையடுத்து, கலெக்டர் அருண் தம்புராஜிடம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, ஊராட்சி நிதியில் இருந்து பள்ளிக்கு கழிவறை கட்ட கிராம ஊராட்சி பி.டி.ஓ., சரணவன் மற்றும் குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணனுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து கலெக்டர் அருண்தம்புராஜ், குமராட்சி அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று, பார்வையிட்டு, ஊராட்சி நிதி மூலம் பள்ளிக்கு புதிய கழிவறை கட்ட உத்தரவிட்டார்.

அதன்பின், ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், 15 லட்சத்து 70 ஆயிரம் ஊராட்சி நிதி ஒதுக்கீடு செய்து, கழிவறை கட்டி முடிக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், தலைமை ஆசிரியர் பிரணவ் மாறன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரங்கநாதன், வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய கழிவறை கட்டப்பட்டதையடுத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலெக்டர் மற்றும் ஊராட்சி தலைவரை ஆகியோரை பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us