/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
ADDED : ஜூன் 22, 2024 05:07 AM
கடலுார், : கடலுார், பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர்,69. இவர், அதே பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த நபர்கள் இருவர், முகவரி கேட்பது போல் நடித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.3,500 மதிப்பிலான மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சேகர் கடலுார், முதுநகர் காவல் நியைலத்தில் புகார் அளித்தார். போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். போலீசார், வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர், தேவனாம்பட்டிணம் மாறன் மகன் கோகுலகிருஷ்ணன்,20; என்பதும், சேகரிடம் மொபைல் பறித்ததும் தெரிந்தது. உடன், அவரை கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் குப்பன்குளம் சுதாகரை தேடி வருகின்றனர்.