/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கரும்புக்கான கூடுதல் கழிவுத் தொகை கோர்ட் உத்தரவுபடி வழங்க மனு கரும்புக்கான கூடுதல் கழிவுத் தொகை கோர்ட் உத்தரவுபடி வழங்க மனு
கரும்புக்கான கூடுதல் கழிவுத் தொகை கோர்ட் உத்தரவுபடி வழங்க மனு
கரும்புக்கான கூடுதல் கழிவுத் தொகை கோர்ட் உத்தரவுபடி வழங்க மனு
கரும்புக்கான கூடுதல் கழிவுத் தொகை கோர்ட் உத்தரவுபடி வழங்க மனு
ADDED : ஜூன் 14, 2024 06:44 AM

நெல்லிக்குப்பம்: விவசாயிகளுக்கு கோர்ட்டு உத்தரவுபடி வழங்க வேண்டிய தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழகத்தில் பல தனியார் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. தமிழக கரும்பு சட்டப்படி விவசாயிகள் சப்ளை செய்யும் கரும்பில் கழிவுக்காக 1 சதவீதம் ஆலை பிடித்தம் செய்யலாம் என கூறியுள்ளது.ஆனால் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை சட்டவிரோதமாக கழிவுக்காக கூடுதல் சதவீதம் பிடித்தம் செய்தனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு தாக்கல் செய்த வழக்கில் கூடுதலாக பிடித்தம் செய்ததற்கான தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன்,தென்னரசு,ராமலிங்கம் உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலை உதவி பொது மேலாளர் நடராஜனிடம் கோர்ட்டு தீர்ப்புபடி விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டுமென மனு அளித்தனர்.