விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்
விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்
விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 14, 2024 06:45 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் விதிமுறை மீறி வந்த இரண்டு லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
கடலுார் மாநகராட்சி பாரதி சாலை வழியாக காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ஜவான்பவன் சாலையில் இருந்து செம்மண்டலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில் விதிமுறை மீறி பாரதி சாலையில் இரண்டு சரக்கு லாரிகள் சென்றது. இதைக்கண்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் இரண்டு லாரிகளையும் மடக்கி, வழக்கு பதிந்து தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.