Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில் நந்தவனத்தில் ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பக்தர்கள் அவதி

கோவில் நந்தவனத்தில் ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பக்தர்கள் அவதி

கோவில் நந்தவனத்தில் ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பக்தர்கள் அவதி

கோவில் நந்தவனத்தில் ஆக்கிரமிப்பு விருத்தாசலத்தில் பக்தர்கள் அவதி

ADDED : ஜூன் 14, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவன நுழைவு வாயிலை ஆக்கிரமித்து டீக்கடை வைத்ததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவில் எதிர்புறம் உள்ள நந்தவனத்தில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் செயல்படுகிறது. இதன் நுழைவு வாயிலில் காலியாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை வைத்துள்ளனர்.

இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். ஏற்கனவே கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், புதிதாக ஆக்கிரமிப்பு செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நந்தவன நுழைவு வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற, கோவில் செயல் அலுவலர் மாலா நேற்று விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் கடிதம் வழங்கியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us