/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முந்திரி உற்பத்தி குறைந்ததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை முந்திரி உற்பத்தி குறைந்ததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை
முந்திரி உற்பத்தி குறைந்ததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை
முந்திரி உற்பத்தி குறைந்ததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை
முந்திரி உற்பத்தி குறைந்ததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 02, 2024 05:34 AM
பண்ருட்டி: பண்ருட்டி பகுதிகளில், முந்திரி உற்பத்தி குறைந்ததால் அதனையே நம்பியுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்ப்ளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், தானே புயலுக்கு பின் முந்திரி மரங்கள் வேறோடு ஆட்டம் கண்டதால், அப்போதில் இருந்து 3 ஆண்டுகள் வரை முந்திரி உற்பத்தி சரிந்தது. அதையடுத்து, புயலில் முந்திரி மரங்கள் விழுந்த பகுதியில், பல விவசாயிகள் மாற்று பயிர் செய்ய துவங்கிவிட்டனர்.
மாற்று பயிர் செய்ய முடியாத விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டு முந்திரி மரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை வரும் வருமானத்தை பெரிதும் நம்பி, அந்த தொழிலில் தொடர்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் தை மாதம் பூ வைத்து மாசி,பங்குனி, சித்திரை மாதங்களில் முந்திரி கொட்டைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக முந்திரி மரங்களில் வைத்த பூக்கள் கருகி வீணானது. முந்திரி மரங்கள் பெரும்பாலும் மானாவரி பயிராக உள்ளதால், மரத்திற்கு தண்ணீர் வைப்பது, பூச்சி மருந்து தெளிப்பது, உரமிடுவது என, விவசாயிகளுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது.
அப்படி செலவு செய்தும், இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக, போதிய உற்பத்தியில்லை. இதனால், முந்திரியை முழுமையாக நம்பியிருந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.