/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது
பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது
பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது
பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது
ADDED : ஜூன் 02, 2024 04:45 AM

விருத்தாசலம்: தனியார் பள்ளி முதல்வரிடம், ரூ.7.30 லட்சம் ஏமாற்றிய போலி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் ரேவதி,50; விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த சுமதி. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
அப்போது, தனியார் பள்ளி துவங்க இருப்பதாகவும், அதற்கு இடம் பார்த்து வருவதாக சுமதியிடம், ரேவதி கூறியுள்ளார்.
அதற்கு, சுமதி தனது கணவர் சிவக்குமார் மூலம் இடம் வாங்கி தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு ரேவதியிடம் ரூ.7.30 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் இதுவரை இடம் வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து ரேவதி கடந்த 4ம் தேதி அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்தனர்.
அதில், சுமதியின் கணவர் சிவக்குமார் இல்லை என்பதும், பணத்திற்காக இருவரும் தம்பதியாக நாடகமாடியது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.