ADDED : ஜூன் 05, 2024 03:23 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் டிரான்ஸ்பார்மர் ஆயில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் மணலுார் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் விருதகிரி. இவர் கடந்த 26ம் தேதி வழக்கம்போல் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது வயலில் இருந்த தனது மின் மோட்டாரை இயக்க முயன்றார்.
அப்போது, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் திறந்திருப்பது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
மின்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது, டிரான்ஸ்பார்மரில் இருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 173 கிலோ எச்.வி.எல்.வி., காப்பர் மற்றும் 195 லிட்டர் ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் உதவி மின் பொறியாளர் பிரபாகரன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்ளை தேடி வருகின்றனர்.