ADDED : ஜூன் 05, 2024 03:22 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். அதே போன்று, கைலாசநாதர் கோவில், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் ராஜராஜேஸ்வரர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் பிரதோஷ நாயகருக்கு நேற்று மாலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலாவாக வந்து அருள்பாலித்தார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். இதேபோல், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவில்களில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.