/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி 500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி
500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி
500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி
500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜூன் 23, 2024 05:36 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் பழக்கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பண்ருட்டி கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன் சுந்தரமூர்த்தி ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன், மேற்பார்வையாளர் கொளஞ்சி கலந்து கொண்டனர். ஆய்வின்போது சுமார் 500 கிலோ கெட்டுப்போன பலாப்பழங்கள் பஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஹோட்டல்களில் ஆய்வு செய்து குளிர் பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்த பிளாஸ்டிக் 5 கிலோ பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன பழங்களை விற்ற நான்கு கடைகளுக்கும், இரண்டு ஹோட்டல்களுக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.