குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்
குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்
குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற தாய்
ADDED : ஜூன் 23, 2024 05:37 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி காந்தி ரோட்டில் ஹஜரத்நுார் முகம்மது அவுலியா தர்கா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு, 8 வயது பெண் குழந்தை மற்றும் 4 வயது சிறுவனுடன் வந்த பெண், தனது குழந்தைகளை விட்டுவிட்டு, மாயமானார். அங்கு தனியாக அழுது கொண்டிருந்த குழந்தைகளிடம் விசாரிக்கையில், அவர்கள் பெயர் மகாலட்சமி, 8; சபரி, 4; என தெரியவந்தது.
மேலும் தங்கள் ஊர் ஆதனுார் என்றும், தந்தை குமார் கிணறு வெட்டும் தொழில் செய்கிறார். தாய் மாரியம்மாள் என்றும் தெரிவித்தனர். தகவலின்பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த குழந்தைகளை அழைத்து சென்று விசாரித்தனர்.
பண்ருட்டி மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்து, கடலுார் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சிறுமி, சிறுவர் குறித்து எந்த ஊரை சேர்ந்தவர்கள் இவருடன் வந்த பெண் யார், ஏன் மாயமானார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டியில் குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் மாயமான பரிதாப சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.