/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 153 பேர் கைது தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 153 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 153 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 153 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 153 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2024 05:36 AM

கடலுார்: கடலுாரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., வினர் 153 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ., வினர் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று திரண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர்கள் மணிகண்டன், மருதை ஆகியோர் தலைமையில், ஓ.பி.சி., அணி மாநிலத் தலைவர் சாய் சுரேஷ், கூட்டுறவு பிரிவு செந்தாமரைக்கண்ணன், மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜீவா வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜ், கோபிநாத் கணேசன், பொருளாளர் ஜெனித் மேகநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தில்குமார், திருமாள்வளவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருள், ராஜேந்திரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என, புதுநகர் போலீசார் கூறியதால் ஆத்திரமடைந்த பா.ஜ., வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நிர்வாகிகள் சிலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தொடர்ந்து, 18 பெண்கள் உட்பட 153 பா.ஜ., வினரை போலீசார் கைது செய்தனர்.