/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தெய்வீக பக்தர் பேரவையினர் அரை நிர்வாண போராட்டம் தெய்வீக பக்தர் பேரவையினர் அரை நிர்வாண போராட்டம்
தெய்வீக பக்தர் பேரவையினர் அரை நிர்வாண போராட்டம்
தெய்வீக பக்தர் பேரவையினர் அரை நிர்வாண போராட்டம்
தெய்வீக பக்தர் பேரவையினர் அரை நிர்வாண போராட்டம்
ADDED : ஜூன் 23, 2024 05:35 AM

சிதம்பரம்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்தக்கோரியும், ஒத்துழைப்பு அளிக்காத தீட்சிதர்களை கண்டித்தும், தெய்வீக பக்தர்கள் பேரவையினர், அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்தில், பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சம்பந்தமூர்த்தி வரவேற்றார். காங்., மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். காங்., நகர தலைவர தில்லை மக்கின், காங்., மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சேகர், வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி பேசினர்.
காங்., நிர்வாகிகள் குமார், செழியன், சின்ராஜ், குமார், மகளிரணி அமுதா, ராதா, ஜனகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரவை மாநில பொது செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.