ADDED : ஜூலை 21, 2024 06:23 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் இருந்ததால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிதம்பரம் மின்வாரியம் சார்பில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், 63 -மெகாவாட்டில் புதியதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி இயக்கி வைத்தார். பு.முட்லுார் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி மின்பொறியாளர் ரவி, பேராசிரியர் ரெங்கசாமி மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.