/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கருக்கை ஊராட்சியில் போர்வெல் அமைப்பு கருக்கை ஊராட்சியில் போர்வெல் அமைப்பு
கருக்கை ஊராட்சியில் போர்வெல் அமைப்பு
கருக்கை ஊராட்சியில் போர்வெல் அமைப்பு
கருக்கை ஊராட்சியில் போர்வெல் அமைப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:22 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கருக்கை ஊராட்சியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த கருக்கை ஊராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய போர்வெல் போடும் பணி நேற்று துவங்கியது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். கருக்கை தி.மு.க., அவைத் தலைவர் கலியபெருமாள், கிளை செயலாளர் ஜோதிநாதன், ராஜீவ்காந்தி,திருநாவுக்கரசு, ரங்கநாதன், ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.