/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு விருத்தாசலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு
விருத்தாசலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு
விருத்தாசலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு
விருத்தாசலத்தில் மாயமான மாணவன் சென்னையில் மீட்பு
ADDED : ஜூன் 04, 2024 06:13 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ராகுல், 15. இவர், ஈரோடு அடுத்த அந்தியூர் ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 29ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட ராகுல், இரவு 9:00 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையம் வந்து விட்டதாக, தந்தை வேல்முருகனிடம் போனில் பேசியுள்ளார்.
அப்போது, தேவங்குடி செல்லும் பஸ்சில் வருமாறு கூறிவிட்டு, ராகுலின் பெற்றோர் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் மகன் வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவனை பல இடங்களில் தேடினர். மாணவன் கிடைக்காததால், அவனது தந்தை வேல்முருகன் விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மாணவனை தேடி வந்த நிலையில், நேற்று சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்த மாணவன் ராகுலை, ரயில்வே போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.