ADDED : ஜூன் 04, 2024 06:13 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று மாலை வந்த பெண் 4 கிராம் எடையுள்ள மோதிரத்தை அடமானம் வைத்து பணம் தரும்படி கேட்டுள்ளார். கடை உரிமையாளர் நகையை சரிபார்த்தபோது அது போலி நகை என தெரிய வந்ததும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் போலி நகை மோசடியில் ஈடுபட்டது சேலம் எடிப்பாடி பகுதியை சேர்ந்த சத்தியா, 47; என்பது தெரியவந்தது. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சத்தியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.