/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., கூட்டணி முகவர்களுக்கு ஆலோசனை அ.தி.மு.க., கூட்டணி முகவர்களுக்கு ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி முகவர்களுக்கு ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி முகவர்களுக்கு ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி முகவர்களுக்கு ஆலோசனை
ADDED : ஜூன் 04, 2024 06:11 AM

கடலுார், : அ.தி.மு.க., கூட்டணி சார்பில், கடலுார் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலுார் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரையில் ஓட்டு எண்ணும் மையத்திலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், அண்ணா தொழிற்சங்க சூரியமூர்த்தி, ஜெ., துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆறுமுகம், பக்தரட்சகன், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.