/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா
ADDED : ஜூன் 10, 2024 01:35 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தச கலச பூஜை, 108 சங்குக்கு விசேஷ பூஜை, திரவ்ய ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, அறங்காவலரின் முகவர் மணிகண்டன், மண்டல பூஜை விழாக்குழு தலைவர் ரவி, துணைத் தலைவர் செல்லபெருமாள் உட்பட பலர் செய்திருந்தனர்.