/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஜீப் கண்ணாடி, பெயர் பலகைகள் உடைப்பு; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஜீப் கண்ணாடி, பெயர் பலகைகள் உடைப்பு; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஜீப் கண்ணாடி, பெயர் பலகைகள் உடைப்பு; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஜீப் கண்ணாடி, பெயர் பலகைகள் உடைப்பு; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஜீப் கண்ணாடி, பெயர் பலகைகள் உடைப்பு; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 10, 2024 01:31 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி மற்றும் பெயர் பலகைகளை உடைத்த வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஊழியர்கள் பணிக்கு சென்றபோது, அங்கு நிறுத்தியிருந்த கனிமவளத்துறை அதிகாரியின் ஜீப் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அலுவலகத்தின் உள்ளே சென்றபோது, முதல்தளத்தில் கலெக்டர் அறை முன் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகை, டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் அலுவலக பெயர் பலகை உடைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்வீசி ஜீப் கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர், கலெக்டர் அறை முன் இருந்த பெயர் பலகையை உடைத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், நடுவீரப்பட்டு அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த பாலசண்முகம்,35; என்பவர் தாக்கியது தெரிய வந்தது. இவரை பிடித்து விசாரித்ததில், அவர் புவனகிரி தாலுகா, சொக்கன்கொல்லை வி.ஏ.ஓ., என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. உடன், அவரை போலீசார் கைது செய்தனர்.