/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சொத்து வரிக்கு லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' சொத்து வரிக்கு லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
சொத்து வரிக்கு லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
சொத்து வரிக்கு லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
சொத்து வரிக்கு லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 11, 2024 05:28 AM
கடலுார்: சொத்து வரி விதிக்க லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த செல்வம்,40; தனது வீட்டின் பின் பகுதியில் அமைத்துள்ள மரப்பட்டறைக்கு சொத்து வரி நிர்ணயிக்க கோரி கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு வருவாய் ஆய்வாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
அதனையொட்டி கடந்த 7ம் தேதி செல்வத்திடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாஸ்கரன் மற்றும் உதவியாளர் லட்சுமணன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கையாக பாஸ்கரன், லட்சுமணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவிட்டுள்ளார்.