Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சி.என்.பாளையத்தில் மகா கும்பாபிஷேகம்

சி.என்.பாளையத்தில் மகா கும்பாபிஷேகம்

சி.என்.பாளையத்தில் மகா கும்பாபிஷேகம்

சி.என்.பாளையத்தில் மகா கும்பாபிஷேகம்

ADDED : ஜூலை 08, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் கொஞ்சிக்குப்பம் கவரப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள கவரப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

6ம் தேதி சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரம், பிரவேசபலி,ரக்ஷாபந்தனம்,முதல்கால யாகசாலை பூஜை நடந்து,இரவு 10:00 மணிக்கு பூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை,தனபூஜை,நாடி சந்தானம்,நவக்கிரக பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

காலை 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து,யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 9:30 மணிக்கு சப்த கன்னிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.10:20 மணிக்கு கவரப்பட்டு முத்துமாரியம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us