/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிடப்பில் போடப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணி
கிடப்பில் போடப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணி
கிடப்பில் போடப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணி
கிடப்பில் போடப்பட்ட சுடுகாட்டிற்கு சாலை அமைக்கும் பணி
ADDED : ஜூலை 08, 2024 04:38 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சுடுகாட்டிற்கு செல்லும் தார்சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுடுகாட்டிற்கு ஒன்றிய பொது நிதியில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக முன் துவங்கியது.சுடுகாடு வரை சாலை முழுமையாக போடாமல் பாதி துாரத்திற்கு மட்டுமே ஜல்லிகள் கொட்டப்பட்டு,செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தார்சாலை அமைக்கும் பணி நடக்காமல் கடந்த 2 மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆகையால் ஒன்றிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.