/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோட்டா முறையில் ஆலைகளில் சர்க்கரை விற்பனை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கோட்டா முறையில் ஆலைகளில் சர்க்கரை விற்பனை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
கோட்டா முறையில் ஆலைகளில் சர்க்கரை விற்பனை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
கோட்டா முறையில் ஆலைகளில் சர்க்கரை விற்பனை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
கோட்டா முறையில் ஆலைகளில் சர்க்கரை விற்பனை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 04:36 AM
நெல்லிக்குப்பம்: சர்க்கரை ஆலைகள் கோட்டா முறையில் சர்க்கரை விற்பனை செய்ய வேண்டுமென்பதை ரத்து செய்ய விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் மத்திய அமைச்சக நிர்வாக இயக்குனருக்கு அனுப்பிய மனுவில் மத்திய அரசு கூறும் அளவுக்கு மட்டுமே மாதந்தோறும் சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை விற்பனை செய்ய முடியும்.கடந்த ஜூன் மாதத்துக்கு 25.5 லட்சம் டன்கள் சர்க்கரையை விற்று கொள்ள அனுமதித்தது.ஆனால் ஜூலை மாதம் விற்பனைக்கு 24 லட்சம் டன் மட்டுமே அனுமதித்துள்ளது.கடந்த மாதத்தை விட ஜூலை மாதத்துக்கு 1.5 லட்சம் டன் குறைத்து அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் ஜூன் மாததத்துக்கு 61 ஆயிரத்து 583 டன்களும்,ஜூலை மாதத்துக்கு 56 ஆயிரத்து 447 டன்கள் மட்டுமே விற்க அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்துக்கு 5 ஆயிரத்து 136 டன்கள் குறைவாக இலக்கு நிர்ணயித்துள்ளது.கோட்டா முறையை அமல்படுத்துவதால் சர்க்கரை ஆலைகள் தங்கள் விருப்பத்துக்கு விற்பனை செய்ய முடியாமல் சிரமபடுகின்றனர். கூட்டுறவு ஆலையில் இருப்பில் உள்ள சர்க்கரையை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வட்டி கட்டுகின்றனர்.
இதனால் சர்க்கரை ஆலைகளும்,கரும்பு விவசாயிகளும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.கோட்டா முறையில் சர்க்கரையை விற்பனை செய்ய வேண்டுமென்ற உத்தரவில் இருந்து தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.