ADDED : ஜூலை 30, 2024 05:35 AM
கடலுார்: கடலுார் இலக்கியச் சோலை அமைப்பு சார்பில், காமராஜர் விழா கவியரங்கம் நடந்தது.
தலைவர் துரையன் தலைமை தாங்கினார். பொருளாளர் வேங்கடபதி வரவேற்றார். நீலகண்டன், திருக்குறள் குறித்து பேசினார்.
முனைவர் பாஸ்கரன் தலைமையில் காமராஜர் கவிமாலை என்ற கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் மகேஸ்வரி, வீரப்பன், பழனிவேல், செந்தில்முருகன், முனைவர் அருணாச்சலம், விடுதலை, ரமேஷ், அன்பன்சிவா, எழிலேந்தி பங்கேற்றனர்.
அப்போது, உலகத்திருக்குறள் பேரவை பாஸ்கரன், மாநகர தமிழ்ச்சங்கம் தங்கம், சுதர்சனம், அரசு ஊழியர் சங்கம் சந்திரசேகரன், கடலுார் மாவட்ட தமிழ்ச்சங்கம் ரவி, ஆழ்வார், பேராசிரியர் நடனம், அரிமா சங்க ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.