/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலி பள்ளியில் அறிவியல் திருவிழா நெய்வேலி பள்ளியில் அறிவியல் திருவிழா
நெய்வேலி பள்ளியில் அறிவியல் திருவிழா
நெய்வேலி பள்ளியில் அறிவியல் திருவிழா
நெய்வேலி பள்ளியில் அறிவியல் திருவிழா
ADDED : ஜூலை 30, 2024 05:36 AM

நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி., கல்வித்துறையுடன் இணைந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9 ல் உள்ள என்.எல்.சி., பள்ளியில் 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சியை என்.எல்.சி., கல்வித்துறை செயலர் பிரபாகரன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறிதல் தேர்வில் கிழக்கு மண்டலத்திலுள்ள 10 மாவட்டங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளி குழந்தைகள், 25 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
'காகித கலை' செயல்பாடுகளை பொன்முடி, 'அறிவியல் விந்தைகளை விளக்குதல்' நிகழ்ச்சியை ராஜேந்திரன் 'மகிழ்ச்சியாக கற்றல' நிகழ்ச்சியை பாலகுருநாதன், 'மாணவர்கள் உடல் நலம்' குறித்து டாக்டர் செந்தில் பேசினர்.
அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் தலைமை தா்ஙகினார். .மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பூர்வ சந்திரன் வரவேற்றார்.
மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன், மாநில துணைத்தலைவர் மாணிக்கதாய், மாவட்ட செயலர்கள் பரமேஸ்வரி, கருணாகரன், ராமர், மற்றும் ஞானசேகரன், சுபாகர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை சவீதா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானி அசோக்குமார் பேசினார்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு என்.எல்.சி.,கல்வித் துறையின் செயலாளர் பிரபாகரன், என்.எல்.சி., மின்னியல்துறை துணைப்பொது மேலாளர் ஜெயந்தி பரிசு வழங்கினர்.
நெய்வேலி நகர செயலர் கொளஞ்சியப்பன் நன்றி கூறினார்.