விடுதலை முன்னணி பொதுக்குழு கூட்டம்
விடுதலை முன்னணி பொதுக்குழு கூட்டம்
விடுதலை முன்னணி பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 20, 2024 03:54 AM

கடலுார் : கடலுார் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலை யில் வி.சி., கட்சியின் விடுதலை முன்னணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சங்க சிறப்பு தலைவரும், மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினார். இதில், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் பேசப்பட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நிர்வாகத்தை வலியுறுத்துவது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வு உதவி தொகை நிறுத்தப்பட்டு இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முருகன், வேல்முருகன், சீத்தாராமன், சவுந்தர், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.