
கடலுார் : பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பொறுப்பேற்றார்.
பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளராக பனவத்து வெங்கடேஷ்வர்லு நேற்று பொறுப்பேற்றார். கடந்த 1992ம் ஆண்டு இந்திய தொலைத் தொடர்பு பணியில் சேர்ந்தார். இவர், கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டத்தின் முதன்மை பொது மேலாளராக பணியாற்றினார். மேலும், கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அந்தமான், நிகோபர் தீவுகளிலும் பதவி வகித்துள்ளார்.