ADDED : ஜூன் 18, 2024 05:33 AM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மேல்நிலை பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதையாச்சி மேல்நிலைப்பள்ளியில். பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பேர்லின் வில்லியம் தலைமை தாங்கினார். அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் அன்பரசு, உதவி தலைமை ஆசிரியர்கள் முருகவேல், சுரேஷ், உடற்கல்வி இயக்குனர் முருகையன், என்.சி.சி., ஆசிரியர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.