ADDED : ஜூன் 18, 2024 05:33 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, கார்குடல் மணிமுக்தாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த நபரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அவர் தப்பியோடிய நிலையில், மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். அவர், கார்குடல் பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.