/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நீட் தேர்வில் குளறுபடிகள்; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நீட் தேர்வில் குளறுபடிகள்; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் குளறுபடிகள்; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் குளறுபடிகள்; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் குளறுபடிகள்; மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 04:48 AM

விருத்தாசலம்: நீட், யு.ஜி.சி., நெட் உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி செய்யும் மத்திய அரசை கண்டித்து, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சிவனந்தம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி வளாகம் முன் நின்று, நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.