மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணம்
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணம்
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணம்
ADDED : ஜூலை 05, 2024 04:48 AM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்து கிடந்தது குறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜி மகன் ராஜேந்திரன்,42. முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். அவ்வப்போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றுவிடுவார். கடந்த 3ம் தேதி இரவு 8மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், ராமநத்தம் வெள்ளாறு பாலத்தின் கீழ் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இறப்பிற்கான காரணம் குறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.