/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 05, 2024 04:47 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ரோட்டரி சங்கம் 2024 - 25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
விழாவில், ரோட்டரி சங்கத் தலைவராக ஆனந்தா லாட்ஜ் உரிமையாளர் அசோக்குமார், செயலாளராக பேராசிரியர் பரமசிவம், பொருளாளராக பிரசன்னா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
துணை ஆளுநர் தாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக 2026 - 27ம் ஆண்டிற்கான மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
விழாவில், ஸ்ரீஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், வர்த்தகர் சங்க மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், வழக்கறிஞர் பாலச்சந்தர், கே.எஸ்.ஆர்., பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல், நிர்வாகிகள் அமிரூதீன், மணிகண்டன், சாமுவேல் கென்னடி, பிரகாஷ் ராஜா, சம்பத், சபாபதி, கார்த்திக், ஜாகிர் உசேன், ராஜ்குமார், விருத்தகிரி, குருசாமி, தமிழ்வாணன், குமார், சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த விழாவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், டேங்க் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர்கள், போக்குவரத்து காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.