Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் புறவழிச்சாலை பணி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம் புறவழிச்சாலை பணி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம் புறவழிச்சாலை பணி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம் புறவழிச்சாலை பணி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜூலை 19, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
புவனகிரி: கீரப்பாளையம்- சிதம்பரம் புறவழிச் சாலை பணியின் தரம் குறித்து, தரக்கட்டுப்பாடு அதிகாரிகள ஆய்வு செய்தனர்.

சிதம்பரம்- புவனகிரி சாலை விரிவாக்கப்பணி ரூ. 20.80 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. பணிகள் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் பன்னீர்செல்வம துவக்கி வைத்த நிலையில், முடியாமல் மந்தமாக நடந்து வந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துக்களும் நடந்து வந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியால் தற்போது பணிகள் விரைவாக மேற்கொண்டு முடியும் நிலையில் உள்ளது.

பணிகள் குறித்து தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் ராஜ்குமார் தலைமையில், நவீன கருவிகளுடன் சாலை தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர்கள் விஜயராகவன், சண்முகசுந்தரம், சாலை ஆய்வாளர்கள் பழனிக்குமார், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us