/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அதிகாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் அதிகாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அதிகாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அதிகாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
அதிகாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூலை 19, 2024 04:52 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் அதிகாரிகளால், தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகரில் ரூ. 1 கோடி செலவில் பணிகள் மேற்கொள்வது உட்பட 85 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது, காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திய தமிழக முதல்வருக்கு சேர்மன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து, கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.
ஆனந்தராசு (சுயே), கவிதா(தே.மு.தி.க): நகரின் முக்கிய சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயை அண்ணாநகர் வழியாக எடுத்து செல்லக்கூடாது.
ஜெயபிரபா(தி.மு.க.): பணி முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பதால் மற்ற வேலையை செய்வதில் காலதாமதம் ஆகிறது. அதிகாரிகள் முறையாக கூட்டத்துக்கு வருவதில்லை. அதிகாரிகள் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலை செய்ய கூடாது. நகரத்தையும் சுற்றி பார்க்க வேண்டும்.
அதிகாரிகள் செயல்பாட்டால் தமிழக ஆட்சிக்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது. இதே கருத்தை, இரு தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.
சத்தியா(தி.மு.க): பணி நடைபெறும் இடங்களில் பணியின் விபரங்கள் அடங்கிய போர்டு வைக்க வேண்டும்.
பாரூக் உசேன்(சுயே): ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை.
முத்தமிழன்(தி.மு.க.); நகராட்சி பகுதியில் நாய்கள், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
இக்பால் (ம.ம.க): தமிழக அரசு மின்கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். சாலை விரிவாக்க பணிகள் 2 ஆண்டுக்குமேல் நடப்பதால் மக்கள் பாதிக்கின்றனர்.
பன்னீர்செல்வம் (பா.ம.க): பகலிலும் தெருவிளக்குள் எரிகின்றன. தானியங்கி சுவிட்சுகள் வாங்கி பல மாதங்கள் ஆகிறது.அதை பொறுத்தினால் மின்கட்டணம் குறையும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.