ADDED : ஜூன் 18, 2024 05:38 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் அறுவடை திருவிழா நடந்தது.
செந்தமிழ் மரபுவழி வேளாண் மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
செவி வழி தொடு சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர், கவிஞர் கண்மணி குணசேகரன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ரமேஷ் கருப்பையா முன்னிலை வகித்தனர். பிரதாபன் வரவேற்றார்.
செந்தமிழ் மரபுவழி வேளாண் மையம் வெங்கடேசன், பிரகாஷ், குமிழியம் இயற்கை விவசாயி மூர்த்தி, கருக்கை மரக்காடு அமைப்பு நிர்வாகி பழனிசாமி, நற்பவிமலர் கோலை, ஜெயங்கொண்டம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், தேனீ வளர்ப்பு விவசாயி எரப்பாவூர் ராமசாமி, திண்டிவனம் செந்தில்நாதன், அக்குபஞ்சர் டாக்டர் கலைக்கோவன் பங்கேற்றனர்.
நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியின் திரவத்தை வைத்து நோய்களை குணப்படுத்துவது எப்படி என ஹீலர் பாஸ்கர் பேசினார்.
தொடர்ந்து, இயற்கை விவசாயம் செய்வதன் நன்மைகள், இயற்கை உரங்கள் தயாரிப்பது, தேனீ வளர்ப்பு ஆகியன குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னோடி விவசாயி சுப்ரமணிய சிவா நன்றி கூறினார்.