ADDED : ஜூன் 18, 2024 05:39 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுக்தார நிலையத்தில், உலக ரத்த கொடையாளர்கள் தினவிழா கடைபிடிக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ராமநாதன் தலைமை தாங்கினார். டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். செவிலியர் ஷமீம், துணை செவிலியர் வனஜா, ஆய்வக நுட்புனர் நிர்மலா, ஐ.சி.டி.சி., ஆய்வக நுட்புனர் பாக்கியலட்சுமி, மேயர் ராதாகிருஷ்ணன், செவிலியர் பயிற்சி கல்லுாரி மாணவிகள், எம்,டி.எம்., செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் சிவா, நாதமணி, முத்துலிங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், ரத்த தானம் அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஜாதி, மத பாகுபாடின்றி ரத்ததானம் செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நம்பிக்கை மையம் ஆலோசகர் செல்வமணி நன்றி கூறினார்.