/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லட்சுமி சோரடியா பள்ளியில் கோடை கொண்டாட்டம் லட்சுமி சோரடியா பள்ளியில் கோடை கொண்டாட்டம்
லட்சுமி சோரடியா பள்ளியில் கோடை கொண்டாட்டம்
லட்சுமி சோரடியா பள்ளியில் கோடை கொண்டாட்டம்
லட்சுமி சோரடியா பள்ளியில் கோடை கொண்டாட்டம்
ADDED : ஜூன் 18, 2024 05:40 AM

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆனந்த பைரவி இசைக்குழு சார்பில் கோடை கொண்டாட்டம் நடந்தது.
சிறப்பு விருந்தினர்கள் பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, முன்னாள் நகராட்சி துணை சேர்மன் குமார், பழனி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிறுவனர் தமிழ்ச்செல்வி வாழ்த்தி பேசினார். விழாவில், முதலிடம் பிடித்த பிளஸ் 2 மாணவி தேவசேனாவுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சைக்கிள், இரண்டாமிடம் பிடித்த மாணவி அக்ஷயா, பிளஸ் 1 மாணவர்கள் ஜேஷ்ஜோஷ், ஷவன், சகானா, பிரகதீஷ் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் சூர்யா, விஜயஸ்ரீக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, துணை முதல்வர் பத்தாகான் உட்பட பலர் பங்கேற்றனர்.