ADDED : ஜூன் 18, 2024 05:37 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர்.
பண்ருட்டி நுார்முகம்மது அவுலியா தர்காவில் இருந்து, முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. தர்கா இமாம் தலைமை தாங்கினார்.
ஜெ.பி.ஆர். ஸ்டீல் அதிபர் ஜாகீர்உசேன், தர்கா நிர்வாக குழு தலைவர் சித்திக்பாஷா, டிரஸ்டி அபுல்கலாம் ஆசாத், உறுப்பினர்கள் முகமதுகாசீம், ஜாகீர்உசேன், முன்னள் கவுன்சிலர் யாசீன், இஸ்மாயில் மற்றும் முத்தவல்லிகள், உள்ளிட்ட ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.