ADDED : ஜூன் 18, 2024 05:37 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
சிதம்பரம் சக்தி நகரை சேர்ந்தவர் ஜீவா நியுஸ் மார்ட் உரிமையாளர் ஜீவா விஸ்வநாதன். இவரது மனைவி பரமேஸ்வரி, 70; இவர் நேற்று முன்தினம் இறந்தார். அதனையடுத்து, தனது தாயின் கண்களை தானமாக வழங்க, அவரது மகன் முத்துக்குமார் முன்வந்தார்.
அதையடுத்து, சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில், பரமேஸ்வரியின் கண்கள் தானமாக பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை சிதம்பரம் ரத்ததானக்கழக தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.