/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குவைத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி குவைத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
குவைத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
குவைத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
குவைத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
ADDED : ஜூன் 16, 2024 10:49 PM

காட்டுமன்னார்கோவில் : குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந் சின்னதுரை, 42; என்பவர், குவைத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தங்கியிருந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லை. மனைவி சத்யா, தாய் சிவகாமி முட்டத்தில் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் அவரது உடல் கடந்த 14 ம் தேதி, இரவு முட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு, 15 ம் தேதி கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி, எஸ்.பி., ராஜராம் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து உடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அறித்த ரூ.5 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. முட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்வில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முட்டம் ஊராட்சி தலைவர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், உயிரிழந்த சின்னதுரையின் தாயார் சரோஜா, மனைவி சத்யா ஆகியோரிடம் தலா 2.5 லட்ம் வீதிம் 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி , காட்டுமன்னார்கோயில் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.