ADDED : ஜூன் 16, 2024 10:49 PM
சிதம்பரம் : சிதம்பரத்தில் மருத்து வம் படிக்காமல் மருத்து வம் பார்த்த போலி டாக் டரை போலீசார் கைது செய் தனர்.
சிதம்பரம் வல்லம்படுகையில், மருத்துவம் படிக்காமலேயே, சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அண்ணாமலை நகர் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். சிதம்பரம், அம்மாபேட்டை விபீஷ்ணபுரம், ராஜகணபதி நகரை சேர்ந்த ரமேஷ்,50; வல்லம்படுகையில், மருந்து கடை நடத்தி வருவதும். அதில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலி மருத்துவர் ரமேஷை அண்ணாமலை நகர் போலீசார், கைது செய்தனர்.