/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மாஜி' கவுன்சிலர் வெட்டி கொலை கடலுாரில் மர்ம கும்பல் வெறிச்செயல் 'மாஜி' கவுன்சிலர் வெட்டி கொலை கடலுாரில் மர்ம கும்பல் வெறிச்செயல்
'மாஜி' கவுன்சிலர் வெட்டி கொலை கடலுாரில் மர்ம கும்பல் வெறிச்செயல்
'மாஜி' கவுன்சிலர் வெட்டி கொலை கடலுாரில் மர்ம கும்பல் வெறிச்செயல்
'மாஜி' கவுன்சிலர் வெட்டி கொலை கடலுாரில் மர்ம கும்பல் வெறிச்செயல்
ADDED : ஜூன் 30, 2024 05:33 AM

கடலுார், : கடலுாரில் பைக்கில் சென்ற முன்னாள் கவுன்சிலரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் ஆலைக்காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன்,35; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் நேற்று இரவு 10:30 மணிக்கு, புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதி வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம கும்பல், புஷ்பநாதனை வழிமறித்தது. திடுக்கிட்டு புஷ்பநாதன் கீழே விழுந்து தப்பியோடினார். மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
தகவலறிந்த புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த டி.எஸ்.பி., பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று, புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, புஷ்பநாதனை யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.