Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

காரில் மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

ADDED : ஜூன் 30, 2024 05:32 AM


Google News
நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அடுத்த பாலுார் குயிலாப்பாளையம் பகுதியில், நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது, காரை நிறுத்திவிட்டு, ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். காரில் 500 மி.லி., அளவுள்ள 9 மது பாட்டில்கள் இருந்தது. விசாரணையில், தப்பியோடிய நபர், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்த ராமு, 28; என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராமுவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us