ADDED : ஜூன் 15, 2024 05:35 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகள் மாயமானதாக தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த நத்தம் பாரதியார் நகர் சேர்ந்தவர் முருகன்,50; இவரது மகள் சிவரஞ்சனி,17;பிளஸ்1 முடித்து வீட்டில் உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணவில்லை.
அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.