ADDED : ஜூன் 15, 2024 05:35 AM
குள்ளஞ்சாவடி: கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
புவனகிரி அடுத்த கரிவெட்டி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகாசி மகன், புருஷோத்தமன், 35. இவரது நண்பரான, கருங்குழி பகுதியை சேர்ந்த, அசோக் ராஜ், 35, என்பவருடன் நேற்று முன்தினம், கடலுார் விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார். புருஷோத்தமன் பைக்கை ஓட்டினார். சின்ன தோப்புக்கொல்லை அருகே பைக் சென்ற போது, பின்புறமாக வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த அசோக் ராஜ், புருஷோத்தமன், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.