/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 09, 2024 02:41 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தி.மு.க., நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் பழனிமனோகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், துணைத் தலைவர் கருணாநிதி, வார்டு செயலாளர்கள் கலைவாணன், செந்தில், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வி.சி., கட்சி நிர்வாகி பழனிவேல், தி.மு.க., நிர்வாகிகள் பழனி, செந்தில்குமார், கலையரசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.