/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இஸ்லாமிக் கூட்டமைப்பு கடலுாரில் ஆர்ப்பாட்டம் இஸ்லாமிக் கூட்டமைப்பு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிக் கூட்டமைப்பு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிக் கூட்டமைப்பு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிக் கூட்டமைப்பு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 09, 2024 02:37 AM
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இஸ்லாமிக் கூட்டமைப்பு மற்றும் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு மாநகரத் தலைவர் நஸ்ருதீன் தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார். செயலாளர் அஜ்மீர் கான் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில பொதுச் செயலாளர் உமா பாரூக், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அல்தாபி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம், அக்பர் அலி கண்டன உரையாற்றினர்.
பாலஸ்தீனத்தில் காசா ரபா பகுதியில் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொருளாளர் மூசா நன்றி கூறினார்.